
அஞ்சுமன் நூலகத்திற்கு ஆறு தினசரிகள் வந்து கொண்டிருக்கின்றன.. இவற்றை காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். அஞ்சுமன் நிதிநிலையில் இது பெரும் சிரமமான காரியம். வருடத்திற்கு ஏறக்குறைய 10000 ரூபாய் பில் வருகிறது.
சாமான்ய மக்களுக்கு நாட்டு நடப்பு தெரியட்டுமே என்ற நல்ல எண்ணம் காரணமாகவே இவற்றைத் தொடர்கிறோம். இப்போது என்ன வென்றால் காசுக்காக அப்பட்டமான பொய் புரட்டுகளை தலைப்புச் செய்திகளாக போட்டு மக்களை நேரடியாக முட்டாளாக்க முனைந்திருக்கிறது ஊடகம். இனி இந்த குப்பைக் காகிதங்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் செய்தித் தாள் ஏஜென்ட்டை அழைத்து நாளை முதல் தினசரிகளை நிறுத்த சொல்லிவிட்டேன்..
அஞ்சுமனுக்கு ஆறு ஆதார நோக்கங்கள் உண்டு.. அவற்றில் முதன்மையானது அறிவூட்டுவது.. அதற்கு புறம்பான எதையும் செய்ய அஞ்சுமன் தயாராக இல்லை.. யோக்கியமான நியாயமான செய்திகளை மக்களுக்கு வழங்க மாற்று வழிகளை கண்டிப்பாக ஆராய்ந்து நடைமுறைப் படுத்துவோம்..