



நேற்றைய முன்தினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற சாகித்திய அகாதமி விருதாளர் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் நினைவேந்தல் நிகழ்விற்கு கழக பொது செயலாளர் கலைமாமணி பேரா. மு.சாயபு மரைக்காயர் தலைமை தாங்கி தோப்பில் அவர்களுக்கும் தனக்கும் கழகத்திற்கும் இடையேயான தொடர்புகளை பதிவு செய்தார்.
நினைவேந்தல் உரை நிகழ்த்த நாம் வேண்டிக் கொண்ட இருபெரும் பேராசிரியர்கள் புதுவை பல்கலைக்கழக தமிழியற்புல பேரா முனைவர் பா. ரவிக்குமார் மற்றும் சாரதா கங்காதரன் கல்லூரி பேரா முனைவர் இர. பிரபா ஆகியோருக்கும் தோப்பிலுக்கும் இடையே ஒரு ஆத்மார்த்தமான உறவு உண்டு. முனைவர் இர. பிரபா தோப்பிலாரின் எழுத்துக்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.. பேரா. ரவிக்குமார் அவருக்கு நெறியாளுநராக இருந்தவர். எனவே இருவர் பேச்சிலும் எழுத்துக்களைத் தாண்டி தோப்பிலாரின் மானுட நேயம் வெளிப்பட்டது.. அதிலும் ஆய்வறிஞர் பிரபா தோப்பிலாரின் இல்லத்தில் தங்கி அவருடன் அளவளாவிய அனுபவத்தில் தன்னை மகள் போல் பாவித்து வாஞ்சையுடன் நடத்திய தோப்பிலாரின் அன்பு நெஞ்சத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார். பேரா ரவிக்குமார் தனது உரையில் தோப்பிலாரின் நாவல்களின் சமூக வாழ்வியல் பதிவுகளையும் மனிதர்களின் போராட்டத்தையும் நேர்த்தியாக பதிவு செய்தார்.
இறுதியாக, தோப்பிலாரின் சிறுகதைகள் குறித்துப் பேசிய அஞ்சுமனின் பேராசிரியர் நா.இளங்கோ, “மரித்துப் போன மானுடத்தைத் தேடும் முயற்சியே தோப்பிலின் எழுத்துக்கள். எல்லோரும் தோப்பிலின் கதைகளில் மானுட பார்வையை தேடுவார்கள்.. அதையும் தாண்டி அவரது கதைகளில் மூக்கும் காதும் இருக்கின்றன.. அவரது கதை மாந்தர்கள் என்றென்றும் ஏதாவதொரு வாசத்தை வீசிக் கொண்டிருப்பார்கள். காலத்தின் குரலைக் கேட்டுக் கொண்டே இஇருப்பார்கள்” என்று நிறைவாக முடித்தார்.
நம் காலத்து இலக்கிய ஆளுமையின் செறிவான நினைவுகளை உணர்வு பூர்வமாக பரிமாறிக் கொண்ட பேராசிரியர்களின் உரையை நோக்கர்கள் சிலாகித்துப் பாராட்டினார். அஞ்சுமன் சார்பாக இந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை முன்னின்று சிறப்பாக செய்த அஞ்சுமன் உறுப்பினர்கள் Anas SulthanaSithik Basha JulfySmj AmeenSulaiman SulaimanJalalAbdul Cader Azees உள்ளிட்ட அனைவருக்கும் எப்போதும் போல் நிறைந்த ..