

நேற்றொரு கார்காலம்..
கார் என்ற அழகிய தமிழ்ச் சொல் நிகழ்த்துக் கருவி, அறிவு மயக்கம், அழகு, செவ்வி (பக்குவநிலை), இனிமை என்று பல்பொருளில் வழங்கப்படுகிறது..
நேற்று தமிழ் முஸ்லிம் திண்ணையின் மட்டுறுத்துநர் (moderators) கூடுகை சென்னையில் நடைபெற்ற போது முகநூல் எனும் நிகழ்த்துக் கருவியின் இன்னும் சிலாக்கியமான பயன்பாடு, அறிவார்ந்த பெருமக்கள் நிறைந்த அவையின் அழகு, விவாதங்கள் விளைவித்த பக்குவம், எல்லாவற்றையும் அதிகமாக பேசி குழப்பும் என்னால் ஏற்பட்ட அறிவுமயக்கம், செவிக்குணவு நிறைத்து வயிற்றுக்கும் அதிகமாய் ஈந்த தட்கா உணவு மற்றும் அந்த கமலி மர்யம் கையளித்த காயல் அல்வா ஆகியவற்றின் தெவிட்டாத சுவை என்று நேற்றைய பொழுது காரோடு முற்றிலும் பொருந்திப் போனது..
எல்லாவற்றையும் விட அஞ்சுமனுக்காக ஏகப்பட்ட நூல்களை வாரி வழங்கிய Sadayan Sabu அத்தாவால் காரும் நிறைந்தது..
கலிகாலத்திலும் திண்ணையைக் கட்டி அதில் பாய் விரித்து, பந்தி வைத்து, சிறுக சிறுக கட்டி பெருக வாழ சிறப்பான சம்பவம் செய்யும் அன்பு நண்பர் Kombai S Anwar க்கு கார்கால குளிர் வாழ்த்து..