Month: March 2021

அஞ்சுமனுக்கு அறிவு அர்ப்பணித்த நூல் கொடையாளர்கள்

அன்பிற்கினிய மௌலானா Abdurrahman Umari அஞ்சுமனுக்காக அனுப்பித்தந்த 27 அருமையான புத்தகங்கள்.. எவ்வளவோ நெருக்கடிகள் இருந்தாலும் அஞ்சுமனைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற உத்வேகத்தை – உற்சாகத்தைக் குன்றாமல் காத்துவருவது மௌலானா போன்ற நூல் கொடையாளர்களும் அவ்வப்போது இந்த நூல் இருக்கிறதா.. அந்த இதழ் இருக்கிறதா என்று விசாரிக்கும் ஆய்வாளர்களும் தான்.. அஞ்சுமனைக் கட்டிக் காத்துவரும் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. அறிவுத் தேடலின் பயணத்தில் அஞ்சுமன் மீண்டும் உறுதியேற்றுக் கொள்கிறது.. நன்றி.. நன்றி.. நன்றி…
Read more

நூல்கள், நினைவுகள், நம் பண்பாட்டு பேரொளி

வெவ்வேறு பணிகளுக்கிடையிலும் அஞ்சுமன் நூலகத்தை சுத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.. குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் அதற்காக ஒதுக்கி வேலை நடக்கிறது. அப்படி இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது கவி கா.மு.ஷரீப் எழுதிய கடிதங்களின் தொகுப்பாக இந்த 44 பக்க சிறுநூல் கிடைத்தது. சென்னை புதுக்கல்லூரியின் பேரா. Murali Arooban நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இன்று அகப்பட்டதும் உடனடியாக தொலைபேசினேன்.. பேராசிரியருக்கு இன்ப அதிர்ச்சி! பெரு மகிழ்ச்சி!! இந்த நூலைப் புரட்டிப் படித்த […]
Read more

அருமை அன்பளிப்புகள் மற்றும் அறிவின் தொண்டில் அஞ்சுமன்

#அஞ்சுமன்_பொக்கிஷங்கள்.. அருமைச் சகோதரர் Luthufur Rahman நேற்றைய தினம் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகள் (எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், சுஜாதா, ராஜேஷ்குமார், தமிழச்சி, மார்க்ஸ் உள்ளிட்ட அரும்பெரும் எழுத்தாளுமைகளின்) 140 நூல்களை அஞ்சுமன் நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார்.. அறிவு கொளுத்தும் பணியில் அவரது பங்களிப்பை போற்றி பாராட்டி நன்றி தெரிவிக்கிறது அஞ்சுமன்.. அஞ்சுமன் பொக்கிஷங்கள் அதிகரித்துக் கொண்டே வரும் இந்த நேரத்திலும் சமுதாய மக்கள் – இளைஞர்கள் – நூலகத்தை காஷ்மீர் கணக்காய்த்தான் வைத்திருக்கிறார்கள்.. அறிவு அநாதையாய் நிற்கிறது.. என்றாவது […]
Read more
Cart