அன்பார்ந்த அஞ்சுமன் ஆதரவாளர்களே.. நண்பர்களே.. அஞ்சுமன் தனது நூற்றாண்டை நோக்கி நகர்கிறது..
அஞ்சுமன் நூற்றாண்டாக 2025 – 26 ஒரு வருட காலம் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.. அதற்கு முன்கூட்டியே நூற்றாண்டு சிறப்பு செயல்பாடாக கோட்டக்குப்பம் இளைய சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பல்வகை பயிற்சி பட்டறைகள், கலை – இலக்கிய ஊக்குவிப்பு, ஆற்றல்படுத்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் இடமளிக்கும் அஞ்சுமன் அகாடமியும் –
தமிழ் முஸ்லிம் சமூகத்தின் நீண்ட வரலாறு, அதன் பண்பாட்டு நகர்வுகள், அரசியல், இலக்கியம் உள்ளிட்ட மறைக்கப்பட்ட பகுதிகளை வெளிச்சப்படுத்தும் பல்வேறு அஞ்சுமன் ஆவணங்களை மீள்பதிப்பு செய்ய அஞ்சுமன் பதிப்பகம் ஒன்றும் –
நூற்றாண்டின் முத்தாய்ப்பு பணிகளாக மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.. மேற்படி இரண்டு திட்டங்களுக்கும் 8 லட்சம் ரூபாய் நிதி தேவை என்பதால் அஞ்சுமன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கொடையாளர்களாகிய தாங்கள் அஞ்சுமனின் நூற்றாண்டை வரலாற்று சிறப்பாக ஆக்க ஆக்கமும் ஊக்கமும் தந்துதவுமாறு பணிவன்புடன் கோருகிறோம்..
உங்கள் பங்களிப்பு பணமாகவோ, பொருளாகவோ, சேவையாகவோ எப்படி இருந்தாலும் அஞ்சுமன் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளும்.
தங்களின் நிதியுதவியும் ஆதரவும் நிரந்தர நற்காரியமாக நிலைத்து நிற்கும் என்பதற்கு அஞ்சுமன் உறுதியேற்கிறது..
இவண்,
அ.லியாகத் அலி
செயலாளர்.
