அஞ்சுமன் வருகை

மதிப்பிற்கும் அபிமானத்திற்குமுரிய பேரா. Sivakumar Padmanabhan இன்று அஞ்சுமன் நூலகத்திற்கு தனது துணைவியாருடன் வருகை புரிந்தார்.. அஞ்சுமன் செயலர்கள் Abdul Malik Hajath Ali ஒருங்கிணைப்பாளர் Smj Ameen செயற்குழு உறுப்பினர் Mohamed Mubarak உள்ளிட்டோர் பேராசிரியரை வரவேற்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பௌதீக துறை பேராசிரியராக முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து கல்வித்துறையிலும் சமூக வெளியிலும் களப்போராளியாக செயல்பட்டு வரும் பேராசிரியரின் நட்பு முகநூலின் வழியாகவே வாய்க்கப் பெற்றோம்.. அவருடைய தொடர்பில் அறிந்து வியப்படைந்த செய்தி பேராசிரியர் கோட்டக்குப்பத்தின் மண்ணின் மைந்தர் என்பதாகும். பேராசிரியரின் தாத்தா நூற்றாண்டைக் கடந்த கோட்டக்குப்பம் முஸ்லிம் போர்டு பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து உள்ளார்.
அஞ்சுமனின் தோற்றம், நோக்கம், பணிகள், நிறுவனர், மைல்கள்கள் குறித்தெல்லாம் கவனமாக கேட்டறிந்த பேராசிரியர், அஞ்சுமன் பணிகளில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுகோளையும் முன்வைத்தார். கரும்பு தின்ன கூலியும் கொடுத்து விடை பெற்றார். அஞ்சுமனின் நினைவு பரிசாக எனது கோட்டக்குப்பம் பேர் பெற்ற ஊர், அழைப்பொளி கவிதை தொகுப்பையும் கொடுத்து மகிழ்ந்தோம்..
அஞ்சுமனின் நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் நமதூரைச் சார்ந்த இதுபோன்ற ஆளுமைகளை தேடிக் கண்டடைய வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்குண்டு.