இன்று முதல் ஒருவாரகாலம் அஞ்சுமனின் வெள்ளிவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை ராஜதானியின் கல்லி மந்திரி மாண்புமிகு மாதவ மேனன், அஞ்சுமனின் புரவலர் நீதியரசர் பஷீர் அஹமது சையத் மற்றும் அரசு அதிகாரிகள் வருகை புரிந்து வெள்ளிவிழாவினைச் சிறப்பித்தனர்.
வெள்ளிவிழா சிறப்பாக பழைய வார, மாத இதழ்கள் முழுமையாக தொகுத்து வைக்கப்பட்டன. இவற்றுள் 1915-27 காலத்திய ஆனந்த போதினி, ஆனந்தவிகடன், ஜகன் மோகினி மற்றும் அக்கால கட்டத்தில் வெளிவந்த இஸ்லாமிய இதழ்கள் ஆகியவை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.