

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் Sahul Hameed தனது சக பேராசிரியர்களுடன் கடந்த திங்கள் அன்று அஞ்சுமன் நூலகத்திற்கு வருகை புரிந்தார்.. தனது முனைவர் பட்ட ஆய்வு ‘மதரஸா கல்வியில் நவீன போக்குகள் – தொடர் மேம்பாடு’ குறித்த தகவல்களைத் திரட்டிச் சென்றார்கள்..
காலையில் தொடர்ச்சியாக மூன்று மணிநேரம் அவர்களுடன் பல்வேறு தலைப்புகள் குறித்து உரையாடினோம்.. மதரஸா என்றாலே பழமைவாத பழம் பஞ்சாங்கம் என்ற ஒற்றைச் சிந்தனையில் உழலும் நவீன சிந்தனையாளர்களுக்கு மத்தியில் இன்றைக்கும் பல்வேறு வடமாநிலங்களில் ஏழை முஸ்லிம்களின் கல்வித் தேவையை மதரஸாக்கள் தான் நிறைவேற்றுகிறது என்ற உண்மையை கண்கூடாக கண்டவர் நாங்கள்.. இன்றைய சூழலில் அந்த மதரஸா கல்விக்கும் அங்கேயே பிரச்சினைகள் இருக்கிற போது, தென்னக மதரஸாக்களுக்கு வட இந்திய மாணவர்கள் படையெடுப்பது தொடர்கிறது.. உண்மையில் தமிழகத்தின் பல மதரஸாக்கள் வட இந்திய மாணவர்களைக் கொண்டு தான் காலம் தள்ளுகின்றன.. முஸ்லிம்களுக்கு கல்வி பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்ன.. ஒரு முஸ்லிம் சிறுவன் எப்படி சமூக விரோதியாக தேச விரோதியாக ஒரு ஆசிரியராலேயே முத்திரை குத்தப்படுகின்றான்.. சக மாணவர்களைக் கொண்டே எவ்வாறு இம்சிக்கப்படுகிறான் என்பதெல்லாம் நாம் கண்டுகளித்த புதிய இந்தியா சாதனைகள்.. அதையெல்லாம் passing clouds மாதிரி கடந்து விட்டு ‘முஸ்லிம்கள் ஏன் ஒழுங்கா படிக்க மாட்றீங்கே.. மதத்தை கட்டிகிட்டு அழுவுறீங்க’ என்று கேட்டால் முற்போக்கு முகமூடி அணிந்து கொள்ளலாம்.. அப்படியே முஸ்லிம் கல்வி சிக்கல்களை நாசூக்காக மடைமாற்றி அதற்கும் அவனையே காரணம் காட்டி நையப் புடைக்கலாம்..
இந்த நக்கல்களுக்கிடையே மதரஸாக்கள் காலம் தோறும் தம்மை புனரமைத்தே வந்திருக்கின்றன.. பொது கல்வி சிந்திக்காத விவகாரங்களை பேசியிருக்கின்றன.. நான்காம் வேற்றுமை உருபுக்கு இலக்கணக் குறிப்பை மௌலானா அமானீ ஹஜ்ரத் எழுதியது குறித்து விரிவாக ஏற்கனவே பதிந்துள்ளேன்.. (இணைப்பு பின்னூட்டத்தில்) அதே மாதிரி நத்வதுல் உலமாவின் அலி மியான் அவர்கள் கல்விபுலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.. புதிய முயற்சிகளைத் தொடந்து வடிவமைத்தார்.. சீர்திருத்தங்கள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தில் உருவான சில குழப்படி வேலைகளே இங்கே பிரதானப்படுத்தப் பட்டுள்ளன.. அவை நம் விமர்சனத்துக்கு உட்பட்டவை தான் என்றாலும் குறிவைக்கப்பட்டு ஒடுக்கப்படும் சமூகத்தின் சவால்கள் பரந்து விரிந்தவை.. அவற்றை உங்கள் சுருக்க வாதத்துக்குள் அடக்கி புத்திசிகாமணி வேடம் கட்டாதீர்கள்..
1926ல் – வெறும் 21 வயது நிரம்பிய ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் ஆலிம் – நூற்றாண்டு கடந்து நிற்கும் நூலகத்தை நிறுவி, இன்றைக்கும் வரும் பேராசிரியர்களின் அறிவுத் தேடலுக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்ற வியத்தகு சாதனைகளை எத்தனையோ privileged societies செய்வதில்லை.. இதையெல்லாம் கூட நான் விளக்கிச் சொன்னேன்.. அன்றைய நாளை இனிய பொன்னாளாக ஆக்கித்தந்த பேராசிரிய பெருமக்களுக்கு நன்றி.. உங்களின் வருகையால் அஞ்சுமன் பெருமை அடைந்தது..
மாலையில் –
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
என்பதற்கொப்ப, பேராசிரிய பெருமக்கள் ஹலீம் ஹவிஸின் ‘ஹலீம் மீல்’ சுவைத்து மகிழ்ந்தனர்..