

இன்றைய தினம் 75 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினம் அஞ்சுமனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியைப் பறக்கவிட்டு பேரா முனைவர் நா இளங்கோ குடியரசு தின உரை நிகழ்த்தினார். சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அன்பின் வழியாகவும் பல்சமூக உறவாடல் வாயிலாகவும் அகற்ற, இன்னும் உறுதியோடு களத்தில் நிற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உற்ற துணையாக பெரும்பான்மை சமூகத்தினர் கரங் கோர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.. முன்னைவிட சமூக பிணைப்புக்கான களங்களை அஞ்சுமன் உத்வேகத்துடன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.. காலச் சூழலுக்கு ஏற்ப பேராசிரியர் பொருத்தமாக உரை நிகழ்த்தியதில் அஞ்சுமன் உறுப்பினர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்..
விழாவில் அஞ்சுமன் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் சின்ன சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.