











அஞ்சுமன் நாட்காட்டியை இவ்வாண்டு தயாரிப்பது என்று முடிவு செய்தோம். வழக்கமாக தயாரிப்பில் உள்ள நாட்காட்டியில் நமது விளம்பரதாரர் பெயர் போட்டு அச்சடித்து விநியோகிப்பதற்கு நமக்கு உடன்பாடில்லை. அஞ்சுமன் செய்தி, நோக்கம், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும், இதற்காக பணம் தரும் வணிக நிறுவனங்களுக்கும் value for money இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த நாட்காட்டியை custom make ஆக கொண்டுவர தீர்மானித்தோம்.
இந்த அடிப்படையில் அஞ்சுமன் கடந்து வந்த பாதையின் சில மைல்கல் தருணங்களை ஒவ்வொரு மாதத்திலும் இடம்பெறச் செய்தோம். கூடுதலாக அஞ்சுமனுக்காக உழைத்த எமது மூதாதையர்களை சிறப்பு செய்தோம். இஃதன்றி ஒவ்வொரு நாட்காட்டியிலும் இடம் பெறும் பொன்மொழிகளை விட இந்த நாட்காட்டியில் நூலகம், வாசிப்பு, அறிவு ஆகியவை குறித்த பொன்மொழிகளை இடம் பெறச் செய்துள்ளோம். மேலும் சர்வ சமய கருத்துகளை பதிவு செய்து சமரச வாழ்விற்கும் தன் பங்கை அளித்துள்ளது அஞ்சுமன் நாட்காட்டி.
இந்த பணியை சிறப்பாக நிறைவேற்ற என்னோடு ஒத்துழைத்த அஞ்சுமன் நிர்வாக குழுவினர், விளம்பர நிறுவனத்தார், அருமையாக வடிவமைத்துத் தந்த Sunstar digital studio மற்றும் இந்த பணியை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று கேட்டபோது, உடனடியாக விருதுநகரில் உள்ள சாரல் அச்சகத்தின் Jagannath Sacratees அவர்களை பரிந்துரைத்து இறுதிவரை வேலையை கண்காணித்த அன்புதம்பி Saravanakumar Varatharajan உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி..
அனைவரின் பாராட்டைப் பெறும் அளவிற்கு சிறப்பாக அச்சிட்டுத் தந்த திரு. ஜெகன் அவர்களுக்கு சிறப்பு நன்றி.