
அருமைச் சகோதரர் Luthufur Rahman நேற்றைய தினம் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகள் (எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், சுஜாதா, ராஜேஷ்குமார், தமிழச்சி, மார்க்ஸ் உள்ளிட்ட அரும்பெரும் எழுத்தாளுமைகளின்) 140 நூல்களை அஞ்சுமன் நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தார்.. அறிவு கொளுத்தும் பணியில் அவரது பங்களிப்பை போற்றி பாராட்டி நன்றி தெரிவிக்கிறது அஞ்சுமன்..
அஞ்சுமன் பொக்கிஷங்கள் அதிகரித்துக் கொண்டே வரும் இந்த நேரத்திலும் சமுதாய மக்கள் – இளைஞர்கள் – நூலகத்தை காஷ்மீர் கணக்காய்த்தான் வைத்திருக்கிறார்கள்..
அறிவு அநாதையாய் நிற்கிறது.. என்றாவது யாராவது தத்தெடுத்துத் தழுவி நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் அஞ்சுமன் தொடர்ந்து பணியில்…