
அஞ்சுமனின் நூல் விமர்சன அரங்கு
==============================
சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இடையேயான உள் முரண்பாடுகளை எங்ஙனம் பேரினவாத அரசியல் பயன்படுத்திக் கொள்கிறது என்பதற்கான புவியியல் வரலாற்று சாட்சியமாக திகழ்கிறது இலங்கை.. இந்த அவல சாட்சியின் ஆவணமாக வெளிவந்துள்ளன இரண்டு நூல்கள்..
சர்ஜுன் ஜமாலுதீனின்
சாட்சியமாகும் உயிர்கள்
ஏபிஎம் இத்ரீஸின்
என்ட அல்லாஹ்
இந்த நூல்களின் விமர்சன அரங்கினை
எதிர்வரும் அக்டோபர் 2 ஆம் நாள் வெள்ளி மாலை 5.00 மணியளவில் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் ஒருங்கிணைக்கிறது..
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருமிகு பீட்டர் அல்போன்ஸ், பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர்கள் சம்சுதீன் ஹீரா, விஜிதரன் ஆகியோர் நூல்களை விமர்சித்து உரையாற்றுகிறார்கள்..
வரலாற்றைப் படிக்கவும் – புதிய
வரலாற்றைப் படைக்கவும் அன்பு பாராட்டி அனைவரையும் அழைத்து மகிழ்கிறது அஞ்சுமன் நூலகம்..!