சிவில் சர்வீஸ் 2019: முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றம்

சிவில் சர்வீஸ் (UPSC 2019) தேர்வு முடிவுகள், முஸ்லிம் சமுதாய செயல்பாடு எப்படி?

முடிவுகள் நேற்று வெளியாகியிருக்கிறது. IAS, IPS, IFS உள்ளிட்ட சிவில் சர்விஸ் பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ள 829 பேரில், 45 பேர் முஸ்லிம்களாவர் (பார்க்க படங்கள்). இது முந்தைய முடிவை காட்டிலும் 60% அதிகமாகும். சென்ற முறை 28 முஸ்லிம்கள் தேர்வாகியிருந்தனர். இம்முறை தேர்வான முஸ்லிம்களில் ஆறு பேர் பெண்களாவர். முஸ்லிம்களில் முதல் இடத்தை பிடித்துள்ள கேரளாவை சேர்ந்த சfப்னா நசருதீன், இந்திய அளவில் 45-வது இடத்தை பிடித்துள்ளார்.

சராசரியாக 2% என இருந்த முஸ்லிம் தேர்வாளர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியான விழிப்புணர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்தது. சென்ற முறை இது குறைந்த போதிலும் இம்முறை கணிசமாக அதிகரித்திருக்கிறது. சதவீத கணக்கில், இந்திய வரலாற்றில், அதிக முஸ்லிம்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது இம்முறையே அதிகமாகும். சென்ற ஆண்டுகளின் முஸ்லிம் சமுதாய தேர்ச்சி சதவீதம் பின்வருகிறது.

2015 – 3.3%

2016 – 4.5%

2017 – 5.1%

2018 – 3.6%

2019 – 5.4%

இந்த நல்ல முன்னேற்றத்தை உத்வேகமாகக் கொண்டு இன்னும் அதிகப்படியான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் மேற்கொண்டு, குறைந்தபட்சம் முஸ்லிம் விகிதாச்சார அளவிற்காவது தேர்வாகும்படி நாம் மேலேற வேண்டும். தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள். சமுதாயத்திற்கு பயனுள்ள சேவையாக அமைய பிரார்த்தனைகள்.

தகவல் திரட்ட உதவிய தளங்கள்: இந்திய அரசின் UPSC இணையதளம், Muslim Mirror மற்றும் Hindustan Times.

தகவல் உதவி: Aashiq Ahamed

Previous Post
Newer Post

Leave A Comment

Cart