71வது குடியரசு தின விழா – கோட்டக்குப்பம்

நன்றி – Kottakuppam India பதிவு:

கோட்டக்குப்பதில் 71வது ஆண்டு குடியரசு தின விழா அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய தேசிய கொடியை அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரி முதல்வர் மௌலவி ஹாஷிகுர் ரஹ்மான் புஹாரி அவர்கள் ஏற்றினார்கள். விழாவில் அஞ்சுமன் செயலாளர் ஜனாப் லியாகத் அலி @ கலிமுல்லா இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.

விழாவில் கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் தலைவர் மௌலவி பக்ருதீன் பாரூக் மற்றும் அஞ்சுமன் நிர்வாகிகள், அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லுரி நிர்வாகிகள் மாணவர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Previous Post
Newer Post

Leave A Comment

Cart