

இது digital green services உருவாக்கியுள்ள திட்டம்.. ஊரில் நடைமுறைப் படுத்தலாமா? நண்பர்கள் கருத்தளிக்கவும்..
எங்களின் “பசுமைத்தொட்டி 3.0” கெட்டு நாறாது. ஆனால் உங்களின் குப்பைத்தொட்டிகளோ கெட்டுப்போய் எட்டு திக்கும் நாறும். உங்களுக்கு எது வேண்டும் என இனி நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த உலகில் உள்ள எந்த ஊர் குப்பைத்தொட்டியாக இருந்தாலும் அதன் அருகே எவராலும் நிற்க இயலாது. மீறி நிற்கவேண்டி வந்தால் வாய் மற்றும் மூக்கினை பொத்திக்கொள்ள வேண்டி வரும். படமெடுக்க விரும்பினாலும் தொலைவிலிருந்து ஜூம் பண்ணித்தான் எடுக்கணும். மேலும் அதிலிருந்து குப்பைகளை அள்ளுவதோ, இடம்மாற்றுவதோ அல்லது புரட்டி விடுவதோ பெரும்பாடு. மீறி தொட்டால் இலவச இணைப்பாக உங்களுக்கு பலவித வியாதிகள் வரும்.
ஆனால் நாங்கள் வடிவமைத்த “பசுமைத்தொட்டி 3.0” அருகே நின்று வாய் மற்றும் மூக்கினைத் திறந்து வைத்து மணிக்கணக்காக உரையாடலாம். கும்பலாக நின்று குரூப் போட்டோவே எடுக்கலாம். இதில் உருவாகும் உரத்தினை(எரு) புரட்டிவிடுவதும், அள்ளுவதும் மிக, மிக எளிது. மக்கிய எருவானது புட்டு போல நிற்கும். ஏனெனில் இது “மெய்யாகவே அறிவியல்பூர்வமானது” மெய்யான தூய்மை இந்தியாவை உருவாக்க எங்களுடன் கரம் கோர்க்கவும். இதற்கு மேலும் உங்களுக்கு ஐயம் ஏதும் உள்ளதா ?
நன்றி Muhamed Ismail H