இளைஞர்களுடன் உரையாடல்: காலக் கோட்டின் அரிய வாய்ப்பு

அஞ்சுமனின் காலக் கோட்டில் நேற்று ஓர் அசத்தலான நாள்.. இளமையான சிந்தனைகளுடன் மனம் விட்டு ஓர் உரையாடல்.. அவர்களிடம் அச்சம் இல்லை.. தயக்கம் இல்லை.. அநாவசிய மனத் தடைகள் இல்லை..

வேற ஒண்ணுமே செய்யலேன்னாலும் –

குறைந்தபட்சம் இளைஞர்களோடு மாதம் ஒருமுறையாவது உரையாடும் வாசல்களைத் திறந்துவைத்தால் –

காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதை அறிய முடியும்.. வீசும் காற்றின் சுகந்தத்தையும் நுகர முடியும். எங்களுக்கெல்லாம் கிட்டாத வாய்ப்பை வருங்கால சமுதாயத்துக்கும் தர முடியாது என்று அடம் பிடிப்பதைவிட, அவர்கள் அதை பெறவேண்டியது கட்டாயம் என்று எண்ணுவதும் செயலாற்றுவதும் நிகழ்கால சமுதாயம் இயற்றும் மாபெரும் தவம். அதற்காக நாம் வளர்த்தெடுக்க வேண்டிய வேள்வித்தீ இது… வரம் தானாக வாய்க்கும்

Previous Post
Newer Post

Leave A Comment

Cart