
நேற்றைய முன்தினம் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற தோப்பில் முகமது மீரான் நினைவேந்தல் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்த மனநிறைவில் இருந்த தருணத்தில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொது செயலாளர் பேரா. மு.சாயபு மரைக்காயர் அடியேனை கழகத்தின் அமைப்புச் செயலாளராக நியமித்து, கூடுதல் சந்தோஷத்தைப் பீய்ச்சி அடித்தார்.
எப்போதும் இதுபோன்ற மகிழ்ச்சி மத்தாப்புகளை கொளுத்திக் குதூகலிப்பது பேராசிரியருக்கு கைவந்த கலை.. ஆனால் இந்த தருணத்தை மேலும் வண்ணமயமாக்க அருட்தந்தை அந்தோணிசாமி அடிகளார் அவர்களின் கரங்களால் இந்த பதவியை அளித்து அழகு பார்த்தது நாம் எந்த கரங்கள் இணைய வேண்டும் என்று காலமெல்லாம் ஆசிக்கிறோமோ, அந்த ஆசி நிரந்தரமாக நம்மை தழுவிக் கொண்டதாகவே படுகிறது.
பல்வேறு பொறுப்புகளை சுமப்பதில் எனக்கு பெரிய மனத்தடை எப்போதும் உண்டு. எதற்கும் நியாயம் செய்யாமல் போய்விடுவோமோ என்ற பயமே அதற்கான காரணம். பொறுப்புகள் இறைவன் புறத்தில் விசாரணைக்கு உட்பட்டவை என்பதை நான் அஞ்சுபவன். என் மீதான நம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தும் பேராசிரியரின் அன்புக்கு நன்றி.. கழக நிர்வாகிகளுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகிறேன்..