கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று(26/01/2025) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் ஜெ. கிருஷ்ணமூர்த்திஅவர்கள் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின உரை நிகழ்த்தினார். நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.