தர்கா மானிய இடத்தில் அஞ்சுமனுக்காக முதன்முதலாக கொட்டகை அமைத்து, கிராம முனிசிப் ஷேக் சுலைமான் சாஹிப் அவர்களால் புதிய குடில் திறந்து வைக்கப்பட்டது.
வாசகசாலை தொடங்கப்பட்டது. இவ்வாண்டு முதல் ரமலான் மாத ஸஹர்நேரங்களில் பைத்து முழக்கத்துடன் ஊரைச் சுற்றிவரும் பழக்கத்தை முதல்முறையாக அஞ்சுமன் ஆரம்பித்து வைத்தது.
மாலைநேர முதியோர் கல்லி காஜி நூருத்தீன் சாஹிப் அவர்களை ஆரிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் அஞ்சுமன் அங்கத்தினர் இ.அ. முஹம்மது இப்ராஹிம் வெகுகாலம் ஊதியம் பெறாமல் ஆசிரியராக சேவை புரிந்துள்ளார்.
இவ்வாண்டு முதல் இரவு நேரங்களில் ஊரின் முக்கிய இடங்களில் அஞ்சுமன் தெருவிளக்கு ஏற்றிடும் பணியைச் சிறுக சிறுக ஆரம்பித்தது. ரமலான் மாதத்தில் மஸ்ஜிதில் நாள் தவறாமல் பெட்றோமாக்ஸ் விளக்கு ஏற்றப்பட்டது. இதற்காக வீடு தோறும் பிடிஅரிசி வசூலிக்கப்பட்டது.
தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியர் பிரிக்ஸ்டால் துரை ஐ.சி.எஸ்., அவர்களுக்கு அஞ்சுமனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே ஆண்டு வேலூர் பாக்கயாத்துஸ் ஸாலிஹாத் முதல்வர் பெருங்கீர்த்தி வாய்ந்த அல்லாமா முஹம்மது அப்துல் ஜப்பார் அவர்களை வரவேற்றுக் கெளரவித்தது நமது அஞ்சுமன்.
நமதூரில் தொடர்ச்சியாக 35 வருடங்கள் தராவீஹ் தொழுகையை நடத்திய தென்காசி ஹாபிழ் ஷாஹ் முஹம்மது ஷாஹ் அவர்களுக்குத் தேநீர் விருந்தளித்து பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
இன்று மணியம் எஸ். அப்துர் ரஹீம் தலைமையில் நடந்த பத்தாம் ஆண்டு விழாவில் நூலகத்திற் கென தனிஇடம் தேவையென்றும் அதற்காக பழைய மதரஸா இடமே உகந்தது எனவும் ஊர் நாட்டாண்மை பொது ஜனங்கள் முன்பாக தீர்மானிக்கப்பட்டது மதரஸா நிர்வாகிகள் ஒப்புதலுடன் இடம் வழங்கப்பட்டது.
ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டு அஞ்சுமனில் நிகழ்ச்சிகள் நடந்தேறின.
மேற்படி இடத்தில் பொது நூலகத்திற்கான குடில் அமைக்கப்பட்டு நாட்டாண்மை அப்துல் ஹகீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. புதுவை பிரமுகர் ஹாஜி த.கு. முஹம்மது சையீத் பெருந்தொகைக்குப் புத்தகங்கள் அன்பளித்தார். இதே ஆண்டு அஞ்சுமன் இதர சங்கங்களுடன் இணைந்து மாபெரும் மீலாது மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டின் பெருமை வெகுகாலம் பேசப்பட்டது.
நமதூரில் அஞ்சல் நிலையம் இல்லாத குறையை அகற்ற அஞ்சுமன் விடாப்பிடியாக போராடி தனது தொடர் முயற்சியில் இன்று வெற்றிபெற்றது. இதற்காக அரும்பாடுபட்ட காஜி அப்துல் காதிர் இப்ராஹிம் சாஹிப் அவர்கள் ஊருக்கு அஞ்சல் அலுவலராகவும் பணியாற்றிச் சிறப்பித்தார்.
போர்டு ஆரம்ப பாடசாலையில் 1903 முதல் ஆசிரியராகப் பணிபுரிந்தவரும் அஞ்சுமனுக்கு வழிகாட்டியாக நற்சேவை புரிந்தவரு மான அப்துர் ரஹீம் சாஹிப் அவர்களுக்கு அஞ்சுமனில் தேநீர் விருந்தளித்து நீண்ட பிரிவு உபசார பத்திரமும் வாசித்தளிக்கப்பட்டது
மாவட்ட நிர்வாகம் நடத்திவந்த பெண் பாடசாலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் பிள்ளைகள் வருகை குறைகிறது என்கிறநிலையை கருத்தில் கொண்டு அஞ்சுமன் இடத்தை விசாலப்படுத்தி எதிரில் கொட்டகைகையும் அமைத்து பெண்பாடசாலைக்காக நாட்டாண்மை ஷேக் அப்துல் கபூர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு நிதிக்கு பணம் திரட்டி அனுப்ப நீர்மானிக்கப்பட்டு மேற்படி நிதியைப் பொது வசூல் மூலம் திரட்டி கணிசமான தொகை அனுப்பி வைக்கப்பட்டது.
அஞ்சுமன் நூலகத்தின் மேற்கூரை தீவிபத்துக்குள்ளாகி முற்றிலும் எரிந்து விட்டது. புத்தகங்கள், அறைகலன்கள் ஆகியன தீக்கிரையாகின. இக்கோரச் சம்பவம் அஞ்சுமன் அங்கத்தினர்களுக்கு வலுவான கட்டிடம் கட்டிமுடிக்கும் வைராக்கியத்தை ஏற்படுத்தியது.
இன்று முதல் ஒருவாரகாலம் அஞ்சுமனின் வெள்ளிவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை ராஜதானியின் கல்லி மந்திரி மாண்புமிகு மாதவ மேனன், அஞ்சுமனின் புரவலர் நீதியரசர் பஷீர் அஹமது சையத் மற்றும் அரசு அதிகாரிகள் வருகை புரிந்து வெள்ளிவிழாவினைச் சிறப்பித்தனர். வெள்ளிவிழா சிறப்பாக பழைய வார, மாத இதழ்கள் முழுமையாக தொகுத்து வைக்கப்பட்டன. இவற்றுள் 1915-27 காலத்திய ஆனந்த போதினி, ஆனந்தவிகடன், ஜகன் மோகினி மற்றும் அக்கால கட்டத்தில் வெளிவந்த இஸ்லாமிய…
Read More