அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல்.எம். ஷரீஃப் அவர்களும் மேனாள் தலைவர் மெளலவி எம்.எ.இ. அன்சாரி அவர்களும், அஞ்சுமன் ஆலோசகர் மெளலானா மு.சா. ஜஹீருத்தீன் அவர்களும் ஹஜ்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு வழியனுப்பு உபசாரம் நடைபெற்றது.
எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் “இளைஞர்களும் பொது நூலகமும்”எனும் தலைப்பில் மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
புதுவை பாகூர் அரிமா சங்கத்துடன் இணைந்து இன்று கண்சிகிச்சை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் இன்ஸ்டிடியுட் ஆப் புரடக்டிவிடியுல் இயக்குனராகப் பணிபுரிந்துவரும் நமதூரைச் சார்ந்த ஜனாப் எம்.ஐ. லியாகத் அலி அவர்கள் தனது இஸ்லாமும் விஞ்ஞானமும் எனும் ஆய்வு கட்டுரைக்காக ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் பரிசு பெற்றமைக்கு அஞ்சுமன் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதே போன்று மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிவரும் நமதூரைச் சார்ந்த டாக்டர் சாதுல்லா அவர்கள் தோல் தொழில் குறித்த நூல் வெளியிட்டமைக்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
இன்று முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் பெருவிழா பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் உறுதுணையுடன் அஞ்சுமன் சார்பாக மூன்று தினங்கள் நடத்தப்பட்டது. விழாவில் தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாஹிப், வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான், துணைவேந்தர் வே. சாதிக், உள்ளிட்ட சான்றோர்களும் பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டது வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். இஸ்லாமிய இலக்கியங்களைச் சிற்றூர்களில் பரவலாக்குவதற்கு இந்த விழா முன்னோடியாக அமைந்தது. ஊர்கூடி…
Read More
அஞ்சுமன் பவள விழா கோலாகோலமாக நடந் தேறியது. மாவட்ட ஆட்சியர் திருமிகு முஹம்மது அஸ்லம் இ.ஆ.ப. அவர்கள் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தார்.
புதுவை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து அஞ்சுமன் தனது சொந்த இடத்தில் ஏற்படுத்திய மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான காப்பகத்தைப் புதுவை அரசு தலைமைச் செயலர் டாக்டர் ஆர். ரவுத்தன்குப்பம் HRC மூலம் நமதூருக்குப் பெரும் சேவையாற்றிவரும் இந்த மையத்திற்கு அஞ்சுமன் தனது பங்களிப்பாக ரூபாய் 3,00,000/- பொருட்களாகவும் ரொக்கமாகவும் வழங்கியது. அஞ்சுமன் இடத்திற்கு குத்தகைத் தொகை ஆண்டுக்கு ரூ12,000/- மட்டும் ரோட்டரி சங்கம் வழங்கிவருகிறது.
அஞ்சுமனுக்குப் புதிய பார்வையும் பரிணாமத்தையும் ஏற்படுத்தித் தந்த மேனாள் செயலர் காஜி ஜைனுல் ஆபிதீன் 15-11-2014 மறைந்ததை யடுத்து இன்று நடைபெற்றசிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் அன்னாரின் சேவைகளை பாராட்டியும் அஞ்சுமனை அறிவு தளத்தில் பரவச் செய்ய அவர் எடுத்த முயற்சிகளையும் சிலாகித்து அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அன்று நடைபெற்றபொதுக்குழுக் கூட்டத்தில் அன்னாரின் செயல்திறனையும் அர்பப்ணிப்பு உணர்வையும் போற்றிக் கவிதைச் சான்றிதழும் நூலகச் சிற்பி எனும் விருதும் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது.
சற்றேறக்குறைய 60 ஆண்டுகள் பழமையான நமது அஞ்சுமன் கட்டிடம் மராமத்து பணிகள் ஏதும் செய்யப்படாமல் முற்றிலும் சிதில மடைந்த நிலையில் புனரமைப்பு பணி களை மேற்கொள்ள 20.06.2010 அன்று நடைபெற்ற அஞ்சுமன் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் கடந்த ஐந்து வருடமாக கிடப்பில் கிடந்து. 2014 நவம்பரில் இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அஞ்சுமன் துணைக்குழுவினரின் முழுமையான ஈடுபாட்டால், பூஜ்யத்தில் தொடங்கிய இந்த புணரமைப்பு…
Read More
கோட்டக்குப்பத்தில் முதன்முறையாக “கல்விக்கோட்டை” என்ற பெயரில் மாபெரும் கல்வி எழுச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து பயன்பெற்றனர். சென்னை ஐக்கிய நல்வாழ்வு அமைப்புடன் இணைந்து இந்நிகழ்ச்சி செம்மையாக நடந்தேறியது. அஞ்சுமன் தொடர்ந்து இதுபோன்றகூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்ததுடன் பல்துரைநோக்கில் கல்வியாளர்கள் வழங்கிய கருத்துரைகள் மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதாயும் அமைந்தன. பெற்றுத் தருவதாக escholor centre அஞ்சுமன் சார்பாக இந்த கல்வியாண்டில்…
Read More
மார்க்க விழுமியங்களை மாணவர் மனதில் பதியவைத்திட திருக்குர்ஆன் அறிவு போட்டி நடத்தப்பட்டது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அஞ்சுமனின் வெளிநாடுவாழ் உறுப்பினர் – ஆதரவாளர் ஓன்றுகூடும் அஞ்சுமன் சங்கமம் இன்று நடந்தேறியது.
இன்று முதல் அஞ்சுமன் கணிணி பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டு முதல்கட்டமாக ஏழு மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று நாம் ஏற்பாடு செய்த பெருநாள் சந்திப்பு – அஞ்சுமன் சங்கமம் நிகழ்ச்சி நமது இந்து, கிருத்துவ சகோதரர்களின் ஏகோபித்த பாராட்டை பெறுவதாக அமைந்தது. இந்நிகழ்வில் சர்வசமய உரையாடலும், நல்லிணக்கத் களத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விவாதமும் நடைபெற்றன. சமூக, அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கருத்துப் பொழிவு ஆற்றினர். சமுதாயத்தில் சிறப்பான அந்தஸ்தில் இருந்துவரும் அஞ்சுமன் உறுப்பினர்களின் நீண்ட நெடுநாளைய நண்பர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டது சிறப்பிற்குரியது.…
Read More