கண்காட்சி மற்றும் விற்பனை =================== அஞ்சுமன் வழங்கும் மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி மற்றும் விற்பனை நாள்: 10.8.19 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல்… அனைவரும் வருக.. ஆதரவு தருக…
அஞ்சுமன் மகளிர் மையம் நடத்தும்.. மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி மற்றும் விற்பனை தொடர்ந்து 2ஆம் ஆண்டாக.. உங்கள் கடைகளை முன் பதிவு செய்யும் நாள் 28.07.19 – இடம் அஞ்சுமன் நூலகம் கண்காட்சி நாள் : 10.8.19 சனிக்கிழமை ஜாமிஆ மஸ்ஜித் திருமண மண்டபம் கோட்டக்குப்பம்
அஞ்சுமன் நூலகத்தின் சார்பில் – புதுவையின் புகழ்பெற்ற எலும்பு சிகிச்சை வல்லுநர் டாக்டர் வீரப்பன் அவர்களின் தி பாஷ் மருத்துவமனை வழங்கும்.. இலவச எலும்பு & பல் சிகிச்சை முகாம்… 7.7.2019 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை.. இடம்: கோட்டக்குப்பம் அரசு துவக்கப் பள்ளி (முஸ்லிம்), தைக்கால் திடல்.. தேவையுடையவர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.. நலம் விளைய வாழ்த்தும், தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர், அஞ்சுமன் நூலகம், கோட்டக்குப்பம்
அஞ்சுமனின் காலக் கோட்டில் நேற்று ஓர் அசத்தலான நாள்.. இளமையான சிந்தனைகளுடன் மனம் விட்டு ஓர் உரையாடல்.. அவர்களிடம் அச்சம் இல்லை.. தயக்கம் இல்லை.. அநாவசிய மனத் தடைகள் இல்லை.. வேற ஒண்ணுமே செய்யலேன்னாலும் – குறைந்தபட்சம் இளைஞர்களோடு மாதம் ஒருமுறையாவது உரையாடும் வாசல்களைத் திறந்துவைத்தால் – காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதை அறிய முடியும்.. வீசும் காற்றின் சுகந்தத்தையும் நுகர முடியும். எங்களுக்கெல்லாம் கிட்டாத வாய்ப்பை வருங்கால சமுதாயத்துக்கும் தர முடியாது என்று அடம் […]
சமூக ஆர்வங்கொண்ட கோட்டக்குப்பம் வாழ் இளைஞர்களை – மாணவர்களை அவர்களின் சமூக செயல்பாடுகள் குறித்த புரிந்துணர்விற்கும் கலந்தாய்விற்கும் ஆற்றல் ஒருங்கிணைப்பிற்கும் அன்பு பாராட்டி அழைக்கிறது அஞ்சுமன்… பேசுவோம்.. சிந்திப்போம்… செயல்படுவோம்…
நேற்றைய முன்தினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற சாகித்திய அகாதமி விருதாளர் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் நினைவேந்தல் நிகழ்விற்கு கழக பொது செயலாளர் கலைமாமணி பேரா. மு.சாயபு மரைக்காயர் தலைமை தாங்கி தோப்பில் அவர்களுக்கும் தனக்கும் கழகத்திற்கும் இடையேயான தொடர்புகளை பதிவு செய்தார். நினைவேந்தல் உரை நிகழ்த்த நாம் வேண்டிக் கொண்ட இருபெரும் பேராசிரியர்கள் புதுவை பல்கலைக்கழக தமிழியற்புல பேரா முனைவர் பா. ரவிக்குமார் மற்றும் சாரதா கங்காதரன் கல்லூரி பேரா […]
நேற்றைய முன்தினம் கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற தோப்பில் முகமது மீரான் நினைவேந்தல் நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்த மனநிறைவில் இருந்த தருணத்தில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொது செயலாளர் பேரா. மு.சாயபு மரைக்காயர் அடியேனை கழகத்தின் அமைப்புச் செயலாளராக நியமித்து, கூடுதல் சந்தோஷத்தைப் பீய்ச்சி அடித்தார். எப்போதும் இதுபோன்ற மகிழ்ச்சி மத்தாப்புகளை கொளுத்திக் குதூகலிப்பது பேராசிரியருக்கு கைவந்த கலை.. ஆனால் இந்த தருணத்தை மேலும் வண்ணமயமாக்க அருட்தந்தை அந்தோணிசாமி அடிகளார் அவர்களின் கரங்களால் இந்த பதவியை அளித்து […]
கடந்த ஞாயிறன்று (26.5.19) அஞ்சுமன் நடத்திய ரமலான் மானுட நேயக் கூடல் நம் காலத்தின் தட்பவெட்பத்தைக் காட்டும் அளவுமாணியாக அமைந்தது சிறப்பு. வெவ்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்ட மதத் தலைவர்களும், கடவுள் நம்பிக்கையற்றவர்களும், ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பொதுவுடமைவாதிகளும் ஒரே குரலில் அன்புச் செய்தியை உரக்க மொழிந்தது கூடுதல் சிறப்பு. அதே நிலையில் வெறுப்பை இணைந்து வேரறுக்க வேண்டிய கட்டாயக் கடமையை அனைவரும் வலியுறுத்தினர். ‘ஆறு மணிக்கு பூசை இருக்கிறது.. அதற்குள் நான் பேசிவிட்டுச் செல்ல […]