அஞ்சுமனில் கல்வி நிகழ்ச்சி.. இணைப்பில் கண்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து கல்வியாளர்களுடன் நேர்முகத்திற்கான நேரத்தை உறுதி செய்து கொள்ளவும்.. #அஞ்சுமன்_நூலகம்
அஞ்சுமன் வருகை மதிப்பிற்கும் அபிமானத்திற்குமுரிய பேரா. Sivakumar Padmanabhan இன்று அஞ்சுமன் நூலகத்திற்கு தனது துணைவியாருடன் வருகை புரிந்தார்.. அஞ்சுமன் செயலர்கள் Abdul Malik Hajath Ali ஒருங்கிணைப்பாளர் Smj Ameen செயற்குழு உறுப்பினர் Mohamed Mubarak உள்ளிட்டோர் பேராசிரியரை வரவேற்றனர். சென்னை மாநிலக் கல்லூரியில் பௌதீக துறை பேராசிரியராக முப்பது ஆண்டுகள் பணிபுரிந்து கல்வித்துறையிலும் சமூக வெளியிலும் களப்போராளியாக செயல்பட்டு வரும் பேராசிரியரின் நட்பு முகநூலின் வழியாகவே வாய்க்கப் பெற்றோம்.. அவருடைய தொடர்பில் அறிந்து வியப்படைந்த […]
அமெரிக்கா நியூ ஜெர்சியில் சென்ற ஆண்டு நடந்த Student impact festivalல் திரையிட தேர்வு செய்யப்பட்ட அஞ்சுமன் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்து இயக்கிய பயஸ் சலீம் ஒருங்கிணைப்பில் நாளை 7.3.24 வியாழன் மாலை 4.15 மணியளவில் புதுவை பல்கலைக்கழக மாணவர்களுடன் கோட்டக்குப்பத்தில் ஒரு “பாரம்பரிய நடை” (Heritage walk) நடத்த உள்ளார்.. நூற்றாண்டை நோக்கிய அஞ்சுமன் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்..
நூற்றாண்டை நோக்கிய அஞ்சுமனின் பாதையையும் பயணத்தையும் மெருகேற்ற மார்க்க அறிஞர்களான ஆலிம்களுடன் ஓர் கூடுகை.. கண்ணியத்திற்குரிய ஆலிம்களை அன்புபாராட்டி அழைக்கின்றோம்.. சனிக்கிழமை மார்ச் 2, 2024 காலை 7.00 மணி அஞ்சுமன் வளாகம்..
இன்றைய தினம் 75 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினம் அஞ்சுமனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியைப் பறக்கவிட்டு பேரா முனைவர் நா இளங்கோ குடியரசு தின உரை நிகழ்த்தினார். சிறுபான்மை மக்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அன்பின் வழியாகவும் பல்சமூக உறவாடல் வாயிலாகவும் அகற்ற, இன்னும் உறுதியோடு களத்தில் நிற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உற்ற துணையாக பெரும்பான்மை சமூகத்தினர் கரங் கோர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.. முன்னைவிட சமூக பிணைப்புக்கான களங்களை அஞ்சுமன் […]
2023 – 24 ஆம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவிகள்.. இளமறிவியல் பட்டப் படிப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு தலா ₹5000/ மும் சட்டம் பயிலும் மாணவருக்கு ₹10000/- மும் அரசுக்கல்லூரியில் வணிகவியல் பயிலும் மாணவருக்கு ₹3000மும் வழங்கப்படுகிறது.. இந்த உபகார நிதி இறைவன் நாடினால் படிப்பு முடியும் வரை வருடந்தோறும் வழங்கப்படும்.. அஞ்சுமன் விருட்சத்தின் விழுதுகளை வளர்த்தெடுப்போம்.. சார்ந்தோருக்கும் அஞ்சுமன் சார்ந்திருக்கும் கொடை உள்ளங்களுக்கும் கல்விப் பணியில் அக்கறையோடு செயல்படும் செயலர் Abdul Malik அவர்களுக்கும் […]
நாளை காலை 10.30 மணிக்குஅஞ்சுமன் நாள் கொண்டாட்டம்..கோட்டக்குப்பம் ரெயின்போ பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன்…இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்மௌலானா அபுல்கலாம் ஆசாத்,அஞ்சுமனின் நிறுவனர்மௌலானா அப்துல் ஹமீது ஹபீஸ் பாக்கவி பிறந்த தினங்களை நினைவு கூறும் வகையில்..அஞ்சுமன் நாள் கொண்டாடப்படுகிறது..உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..செயலாளர்.
உங்கள் உள்ளங்களிலுள்ள அழுக்குகளை நீங்கள் நீக்கிவிட்டால் யாரும் போதிக்காமலேயே அவற்றில் இறைத்தூதர்களின் போதனைகளை நீங்கள் காண்பீர்கள் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே சரி எது, தவறு எது என்று பிரித்து அறியும் பக்குவம் மனித உள்ளத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டல். மனிதனைப் படைத்த இறைவன்தான் அந்த வழிகாட்டலை மனிதனுக்கு தந்துள்ளான் எனும்போது அது மனிதனின் இயல்புகளோடு முற்றிலும் ஒத்துப்போகக்கூடியதாகத்தான் இருக்கும். அவனுடைய மனதில் காணப்படும் இயல்பான பிரித்தறியும் தன்மைக்கும் […]