ANJUMAN NEWS

அஞ்சுமன் நாட்காட்டி: தனிப்பயனாக்கப்பட்ட, மக்களுக்கு உகந்த வடிவமைப்பு

அஞ்சுமன் நாட்காட்டியை இவ்வாண்டு தயாரிப்பது என்று முடிவு செய்தோம். வழக்கமாக தயாரிப்பில் உள்ள நாட்காட்டியில் நமது விளம்பரதாரர் பெயர் போட்டு அச்சடித்து விநியோகிப்பதற்கு நமக்கு உடன்பாடில்லை. அஞ்சுமன் செய்தி, நோக்கம், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும், இதற்காக பணம் தரும் வணிக நிறுவனங்களுக்கும் value for money இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த நாட்காட்டியை custom make ஆக கொண்டுவர தீர்மானித்தோம். இந்த அடிப்படையில் அஞ்சுமன் கடந்து வந்த பாதையின் சில மைல்கல் […]
Read more

அஞ்சுமன் இளைஞர் மற்றும் மகளிர் ஆற்றல் மேம்பாடு: புதிய முயற்சிகள்

அஞ்சுமன் நூலகம் இளைஞர் – மகளிர் ஆற்றல் படுத்தல் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. கோட்டக்குப்பம் பகுதிவாழ் மக்கள் பலன்பெறும் விதத்தில் அஞ்சுமன் சொத்துக்களை மேம்படுத்துவது என்ற நோக்கில் சென்ற ஆண்டு கடும்நிதி நெருக்கடியிலும் அஞ்சுமனுக்கு சொந்தமான அய்யூப் கார்டன் இடத்தில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான செலவில் இந்த இறகுபந்து மைதானத்தை ஏற்படுத்தினோம். இதோ ஒரு ஆண்டிற்குள் இந்த வசதியை நம் இளைஞர்கள் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அரங்கில் ஒளி விளக்குகள் பொருத்தி மாலை […]
Read more

புத்தக வாசிப்புக்கு ஊக்கம்: மாரியப்பனின் சிறப்பு முயற்சி

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்! வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி தந்து, அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன் மாரியப்பன்! வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் என்ன, எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்க முடி திருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தன் […]
Read more

இயற்கைச் சூழலில் அஞ்சுமன் நிர்வாகக் குழு கூட்டம்: புதிய தொடக்கம்

இயற்கைச் சூழலில் திறந்தவெளியில் அஞ்சுமன் நிர்வாகக் குழு கூட்டம்.. கோவிட் காலத்திற்கு பிறகு 2020 வரையான வரவு – செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நூற்றாண்டை நோக்கிய தனது பயணத்திற்கு மீண்டும் உற்சாகத்தோடு தயார் படுத்திக் கொண்டது நிர்வாகம்…
Read more

அஞ்சுமனின் கல்வி ஆதரவுடன் BDS மாணவிக்கு நிதி உதவி

புதுவை மாவட்ட முஸ்லிம் லீக் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் நிதியளிப்பில் பவானி பல்மருத்துவ கல்லூரியில் BDS இறுதியாண்டு பயிலும் மாணவிக்கு இன்று ரூ 35000/- அஞ்சுமன் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் அஞ்சுமனின் நிர்வாக செயலர் மொய்னுதீன், ஜிகினி முஹம்மது அலி ஆகியோர் பெண்ணின் தாயாரிடம் தொகையை ஒப்படைத்தனர். கல்விக்காக உயிர் கொடுப்போர் காசினியில் சிறப்புற்று வாழ்வர் – நபிகள் கல்விப்பணியில் அஞ்சுமனின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து ஒரு முன்னோடியாக தம்மை இணைத்துக் கொண்ட புதுவை மாவட்ட முஸ்லிம் லீக்கின் […]
Read more

கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்: 123 ஆண்டு பழமையான சான்றிதழ்

அஞ்சுமன் நிறுவனர் காஜி அப்துல் ஹமீது ஹபீஸ் பாகவி அவர்களின் தந்தை அப்துல் காதர் இப்ராஹிம், 1898 ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளி இறுதி பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இது.. (123 ஆண்டு பழமையான ஆவணம்) இதற்கான தேர்வு நடந்தது கோட்டக்குப்பத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் விழுப்புரத்தில் அமைந்த தேர்வு மையத்தில்.. இப்படித்தான் ஆரம்பப்பள்ளி, நடுநிலை (ESLC), உயர்நிலை என்று பொதுத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறும் முறை இருந்தது. கல்வி […]
Read more

75வது சுதந்திர தின கொண்டாட்டம்

இன்று காலை 7.00 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்டத் தலைவர் ஹாஜி வி.ஆர். முஹம்மது இப்ராஹிம் அவர்கள் கொடியேற்றி 75வது சுதந்திர நாள் அஞ்சுமனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்…சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளைப் போற்றுவோம்..
Read more

இந்திய தங்கத்தின் ஏற்றுமதி: வரலாற்றுப் பார்வை

எப்புடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன் மொமன்ட்.. 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த ஒரு வார காலத்தில் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு ஏற்றுமதியான தங்கத்தின் மதிப்பு ரூ 22,03,563/- இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு இதுவரை 88,12,68,612 ரூபாய் பெறுமானமுடைய தங்கம் ஏற்றுமதி ஆனதாக சுதேசமித்திரன் 23.10.1932 இதழ் தெரிவிக்கிறது. தங்கத்தின் அன்றைய விலை தங்கம் தோலா (11.7கி) – ரூ 29-12-6 சவரன் தோலா (11.7கி) – ரூ 18-12-0 […]
Read more

அஞ்சுமன் நூலகத்தின் தகவல் தரநிலைக்கு நிலைத்து நிற்கும் முடிவு

அஞ்சுமன் நூலகத்திற்கு ஆறு தினசரிகள் வந்து கொண்டிருக்கின்றன.. இவற்றை காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். அஞ்சுமன் நிதிநிலையில் இது பெரும் சிரமமான காரியம். வருடத்திற்கு ஏறக்குறைய 10000 ரூபாய் பில் வருகிறது. சாமான்ய மக்களுக்கு நாட்டு நடப்பு தெரியட்டுமே என்ற நல்ல எண்ணம் காரணமாகவே இவற்றைத் தொடர்கிறோம். இப்போது என்ன வென்றால் காசுக்காக அப்பட்டமான பொய் புரட்டுகளை தலைப்புச் செய்திகளாக போட்டு மக்களை நேரடியாக முட்டாளாக்க முனைந்திருக்கிறது ஊடகம். இனி இந்த குப்பைக் காகிதங்களால் ஒரு பிரயோஜனமும் […]
Read more
Cart