Testimonials

04.11.1959 பால்யன்‌ பத்திரிகை ஆசிரியர்‌ ஹனிபா

அஞ்சுமன்‌ நுஸ்ரத்துல் இஸ்லாம்‌ நூலகத்தைப்‌  பார்வையிட்டேன்‌. அறிவு பெருகுவதற்கும்‌, ஆராய்ச்சி செழிப்‌ பதற்கு, இதயம்‌ பண்புறுவதற்கும்‌ அழப்படையான அநேக நூல்கள்‌ இங்கே சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

04.11.1959 Prof. Nafeesa Kaleem

At a time when the world is in chaos and confusion, it is the duty of every citizen to contribute his mite of knowledge in order to spread the Gospel of Peace…

25.04.1960 காயிதே மில்லத்‌ மு. முஹம்மது இஸ்மாயில்‌ சாஹிப்‌
25.04.1960 காயிதே மில்லத்‌ மு. முஹம்மது இஸ்மாயில்‌ சாஹிப்‌

மக்களுக்கு அவசியமான இப்புத்தக நிலையத்தை – உத்தம ஸ்தாபனத்தை நடத்துபவர்களின் உண்மை  ஆர்வமும்‌ திறனும்‌ பாராட்டுதற்குரியுது.

23.02.1980 சிராஜுல்மில்லத்‌ ஆ.கா.அணி அப்துஸ்ஸமது சாஹிப்
23.02.1980 சிராஜுல்மில்லத்‌ ஆ.கா.அணி அப்துஸ்ஸமது சாஹிப்

கோட்டகுப்பத்தின் வணிகப் பிரமுகராகவும், மார்க்க மேதையாகவும் விளங்கிய மௌலானா அப்துல்ஹமீது பாக்கவி அவர்களின் நன்முயற்சியில் பயன்தரும் நூல்கள் இருக்கின்றன. நகரில் பிரதான இடத்தில் இந்நூலகம் சமூதாயத்தின் நற்செயல் கூடமாகவும் விளங்குகிறது.

25.02.1980 ஜமாஅத்துல்‌ உலமா மாத இதழ் ஆசிரியர் மௌலானா அபுல் ஹசன் ஷாதலி ஹஜ்ரத்

இதன்‌ நிறுவனரை  1959ல் ஹஜ் பயணத்தில்‌ தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. சமுதாயப் பற்றிலும்‌ சமுதாயச்‌ சேவையிலும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த அறிஞரைகாஃபாவின் சொந்தக்காரனான அல்லாஹ், புனித மக்கமா நகரிலேயே தங்க வைத்துக் கொண்டான்‌. பெரிய அரபிக்‌ கல்லூரிகளில்‌ இல்லாத பல அரபி, உர்து நூற்கள்‌ இங்கு இடம்‌   பெற்றிருப்புது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

18.03.1993 மெளலவி முஹம்மது சுல்தான்‌ தேவ்பந்தி முதல்வர்‌ : ரப்பானிய்யா அரபிக்‌ கல்லூரி. கோட்டக்குப்பம்‌.

ஒவ்வொருவரின்‌ வாழ்க்கையிலும்‌ சொல்லிலும்‌ செயலிலும்‌ இஸ்லாமியத்தை உருவாக்க வல்லதுதான்‌ இஸ்லாமிய நூல் நிலையங்கள்‌ இதை இந்த அஞ்சுமன் நுஸ்ரத்துள் இஸ்லாம் நூலகம் செய்வதைச் சுற்றிலும் காண்கிறேன்.

25.11.1993 பேராசிரியர்‌ எஸ்‌.ஏ. செய்யது அப்துல்லா.

எதிர்காலச்‌  சந்ததிகளுக்கும்‌ அய்வாளர்களுக்கும்‌ பயன்படும்‌ முறையில்‌ அனைத்து நூல்களையும் ஒழுங்குபடுத்தி சிறந்த அட்டவணை தயாரித்து    வைக்க வேண்டுமென வேண்டிக்‌ கொள்கிறேன்‌…

25.11.1993 பேராசரியர்‌ கமருன்னிஸா அப்துல்லா,

இவ்வரிய பொக்கிஷங்களை ஆண்கள்‌ மட்டும்‌ பயன்படுத்துவது போதுமான தல்ல… இப்பகுதி மகளிர்‌ அனைவரும்‌ எடுத்துப்‌ படித்து, சிந்தித்து, செயலாற்ற ஆவன செய்தல்‌ வேண்டும்‌.

26.11.1993 ஷம்ஷிரே மில்லத்‌ அப்துல்‌ லத்தீப்‌, முஸ்லிம்‌ லீக்‌ மாநிலப்‌ பொதுசெயலாளர்‌.

நம்முடைய பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்கும்‌, கடந்த காலச்‌ சிறப்புகளைத்‌ தெரிந்து கொள்வதற்கும்‌ இந்த சங்கம்‌ ஒரு பலகணி .. இதன்‌ பணிசிறக்க வாழ்த்துகிறேன்‌…

15.05.1994 எழுத்தாளர்‌ டாக்டர்‌ ஹிமானா சையத்‌, சித்தார் கோட்டை.
15.05.1994 எழுத்தாளர்‌ டாக்டர்‌ ஹிமானா சையத்‌, சித்தார் கோட்டை.

இவர்களது வெள்ளிவிழா மலரில்‌ (1951) குறிப்மிடப்‌ பட்டுள்ள வேலைத்‌ திட்டத்தில்‌ தீவு போன்ற சமுதாய வளர்ச்சிகளை ஒன்றிணைக்கும்‌ முயற்சி அப்போதே இருந்திருப்பது தெரிகிறது, இன்னும்‌ ௯ட அது   நிறைவேறாதது சமுதாய அவலமாகும்‌.   இந்த நூலகம் மிகப்‌ பெரிய கலாச்சார மையமாக உருப்பெறக்கூடிய வாய்ப்பை வெளிக்காட்டுகிறத. துஆச் செய்கிறேன்‌..

Cart