கல்வி, அறிவு ஞானம், விளக்கம் ஆகியன அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மிகவும் விருப்ப மானதாகும். அத்தகைய கல்விப் பெருக்கத்திற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக அமைந்திருக்கிற அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நீடூழி காலம் சிறந்து விளங்க வாழ்த்தகிறேன்.
ஆன்றோரின் நூல்கள் பலவாம்; அறிஞர்தம் கருத்துப் பொழிவாம்; சான்றோரின் ஆய்வுக் கோவை; தகைமிகு கவிதை, பாடல் தீன்றி மார்க்கச் சட்டம் திகழ்ந்திடும் நரல்கள் பலவாம் ஈன்றின்பம் நல்கும் நூலகத்தினைப் போற்றுகின்றேன்
மிகவும் போற்றற்குரிய இந்நூல் நிலையத்திற்கு 3000 ரூபாய்க்கான புத்தகங்களை அன்பளிக்கின்றோம்.
இல்லாம் குறித்த ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் அனைவரும் இந்த நூலகத்தைத் தேடிவரும் காலம் நெருங்கிவிட்டது. ஆழ்ந்த சரித்திர உணர்வுடன் இந்த நூலகத்தை மிக நேர்த்தியாக நடத்தி வரும் ஆபிதீன் அவர்களுக்கு அறிவுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
I came to this library in 1959 and now I see it still struggling but fully alive. May Allah grant you all, every success for this library to become a model and fully developed library..
Students and youngsters must be motivated to use the facilities available…
அறிவுப் பறவை கூடு கட்டும் கருவூலம் இதழ் தாகம் எடுக்கும் இனிய நாவுகள் இது ஒரு தண்ணீர்ப் பந்தல் இந்த நூல் ஆடைகள் இஸ்லாத்தின் மானம் காக்கும் வானம்போல் வளர வாழ்த்துக்கள்.
பழம் பெரும் நூலகம் கண்டு மகிழ்ந்தேன், ஆய்வுக்கு உதவும் வகையில் நூல்கள் சேகரிக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது, நூலகம் மேலும் விரிவடைய துஆ செய்கிறேன்.
எவ்விடத்தும் தெடிக் காணக் கிடைக்காத இஸ்லாமிய இலக்கியங்கள் பலவற்றை இந்நூலகம் பாதுகாத்து வைத்திருப்பது பாராட்டுதலுக்கும் போற்றுகுலுக்கும் உரியுது. இந்நூலகப் பொறுய்பாளர்கள் வருகின்ற எங்களைப் போன்றவர்களைப் பேணும் விதம் மிக நன்று.
இன்று இந்த நாலகத்தில் இதழ்கள் ஆய்வு செய்யவும் நகல் எடுக்கவும் வந்தேன். மிகவும் அரிய இதழ்கள் கிடைத்தன.

25.04.1960 காயிதே மில்லத் மு. முஹம்மது இஸ்மாயில் சாஹிப்

சிராஜுல்மில்லத் ஆ.கா.அணி அப்துஸ்ஸமது சாஹிப்

15.05.1994 எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத், சித்தார் கோட்டை

29.06.2003 டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, துணைத்தலைவர், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

09.06.2015 ஜனாப் ப. அப்துல் சமது, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

03,08.2015 முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், தலைவர், தமிழ் மாநில முஸ்லிம் லீக்.

16.08.2015 மெளலவி முஹம்மது இலியாஸ் ரியாஜி

27.09.2015 பாஸ்டர் பி. எட்வின்., மாநில செயலர், விடுதலை சிறுத்தைகள்.., தோழர் இரா மங்கையர்செல்வன் அமைப்பாளர், மீனவர் விடுதலை வேங்கைகள்

02.11.2015 Distinguished Delegates from the Muslim world

10.11.2015 ஜனாப் இப்னு சவுத், இயக்குநர், ஜன்சேவா கூட்டுறவு வங்கி, சென்னை
