Testimonials

30.12.2015 காலைமாமணி பேராசிரியரை சா. நசீமா பானு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம்

நூல்களைச்‌ சேகரித்து வைத்துள்ள ஒரு வாசிப்புச் சாலையாக  மட்டுமல்லாமல்‌ சமுதாய  இளைஞர்களின்‌ மேம்பாட்டுக்கு இந்த நாலகம்‌ பயன்தரும்‌ வகையில்‌ செயல்படுகிறது என்பது மேலும்‌ பெருமை சேர்ப்பதாகும்‌. இளைய தலைமுறைக்கு நாலகச்‌ சிறப்புகளையும்‌ வாசிப்பின்‌ இன்றியமையாமையையும்‌ எடுத்துக்கூறி செயல்படத்‌ தூண்டும்படியும்‌ வேண்டுகிறேன்‌.

31.01.2016 தோழர்‌ இரா. விசுவநாதன்‌, மேனாள்‌ அமைச்சர்‌, புதுவை

புதுச்சேரி விடுதலைப்‌ போராட்டக்‌ காலத்தில்‌ பொதுவுடமை இயக்கத்‌ தலைவர்‌ சுப்பையா மற்றும்‌ தோழர்களைக்‌ கோழி தன்‌ குஞ்சுகளை அடைகாத்தது போல்‌ பாதுகாத்த பெருமை கோட்டக்குப்பம்‌ மண்ணுக்கு உண்டு. இந்த நூலகத்தில்‌ பல  அரிய நூல்கள்‌ இருப்பதும்‌ அதனைத் தொடர்ந்து பாதுகாப்பதும்‌ மிகுந்த பெருமைக்குரியது. இந்த நூலகத்தை புனரமைத்து மிக சிறப்பாக நடத்தும்‌ இளைஞர்‌ குமுவினருககுப் பாராட்டுக்கள்‌.

Cart