சற்றேறக்குறைய 60 ஆண்டுகள் பழமையான நமது அஞ்சுமன் கட்டிடம் மராமத்து பணிகள் ஏதும் செய்யப்படாமல் முற்றிலும் சிதில மடைந்த நிலையில் புனரமைப்பு பணி களை மேற்கொள்ள 20.06.2010 அன்று நடைபெற்ற அஞ்சுமன் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் கடந்த ஐந்து வருடமாக கிடப்பில் கிடந்து. 2014 நவம்பரில் இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அஞ்சுமன் துணைக்குழுவினரின் முழுமையான ஈடுபாட்டால், பூஜ்யத்தில் தொடங்கிய இந்த புணரமைப்பு பணி முற்றிலும் பூர்த்தியடைந்து இன்று அஞ்சுமன் தலைவர் டாக்டர் எல். எம். ஷரீஃப் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
அஞ்சுமன் கட்டிடத்தின் தரை மற்றும் முதல் தளங்கள் ரூபாய் 7,00,000/- செலவிலும் நூலக புத்தகங்கள் மற்றும் அறைகலன்கள் ரூபாய் 1,20,000.- செலவிலும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் நூலகத்தைக் கணினமயமாகும் திட்டத்தில் கணிப்பொறி, அச்சு இயந்திரம், கண்காணிப்பு கேமராக்கள், பார்கோட் உபகரணங்கள் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. அஞ்சுமன் இரண்டாம் தளத்தில் மறைந்த மேனாள் செயலர் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நினைவாக ரூபாய் 2,00,000/- செலவில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டுளளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த வழிகோலும் வகையில் எல்.சி.டி புரொஜக்டர், ஒலி அமைப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.