இன்று முதல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் பெருவிழா பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் உறுதுணையுடன் அஞ்சுமன் சார்பாக மூன்று தினங்கள் நடத்தப்பட்டது. விழாவில் தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாஹிப், வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான், துணைவேந்தர் வே. சாதிக், உள்ளிட்ட சான்றோர்களும் பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டது வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். இஸ்லாமிய இலக்கியங்களைச் சிற்றூர்களில் பரவலாக்குவதற்கு இந்த விழா முன்னோடியாக அமைந்தது. ஊர்கூடி இவ்விழாவினைச் இறப்பாக நடத்தி முடித்தது அஞ்சுமனுக்குப் பெருமை சேர்த்தது.