இன்று நாம் ஏற்பாடு செய்த பெருநாள் சந்திப்பு – அஞ்சுமன் சங்கமம் நிகழ்ச்சி நமது இந்து, கிருத்துவ சகோதரர்களின் ஏகோபித்த பாராட்டை பெறுவதாக அமைந்தது. இந்நிகழ்வில் சர்வசமய உரையாடலும், நல்லிணக்கத் களத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விவாதமும் நடைபெற்றன. சமூக, அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கருத்துப் பொழிவு ஆற்றினர். சமுதாயத்தில் சிறப்பான அந்தஸ்தில் இருந்துவரும் அஞ்சுமன் உறுப்பினர்களின் நீண்ட நெடுநாளைய நண்பர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டது சிறப்பிற்குரியது. விழாவில் உறுப்பினர் மொய்னுதீன் அவர்களின் அருமையான ஏற்பாட்டில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.