

அஞ்சுமன் நூலகம் இளைஞர் – மகளிர் ஆற்றல் படுத்தல் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. கோட்டக்குப்பம் பகுதிவாழ் மக்கள் பலன்பெறும் விதத்தில் அஞ்சுமன் சொத்துக்களை மேம்படுத்துவது என்ற நோக்கில் சென்ற ஆண்டு கடும்நிதி நெருக்கடியிலும் அஞ்சுமனுக்கு சொந்தமான அய்யூப் கார்டன் இடத்தில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான செலவில் இந்த இறகுபந்து மைதானத்தை ஏற்படுத்தினோம்.
இதோ ஒரு ஆண்டிற்குள் இந்த வசதியை நம் இளைஞர்கள் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அரங்கில் ஒளி விளக்குகள் பொருத்தி மாலை நேரங்களிலும் பயன்படுத்தவும், மகளிருக்கு விரிவுபடுத்தவும் அஞ்சுமன் திட்டமிட்டுள்ளது.
இளைஞர் ஆற்றல்கள் விரயமாகிறது என்று குறைபடும் நல்லவர்கள் அனைவரும் அத்தகு ஆற்றல்களை ஒருமுகப்படுத்த நாம் என்ன செய்கிறோம் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணரவேண்டும்.
மேற்படி இடத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சுமன் – ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஹெமரிக்ஸ் ரீஹாபிலிட்டேஷன் சென்டர் மேலாண்மையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றையும் நடத்தி வருகிறது. ஒரே சொத்தை உபயோகத்துக்குக் கொண்டு வந்து இது இரண்டாவது மக்கள் சேவை..