



சமயப் பயனாளிகளின் கனிவான கவனத்திற்கு:
கடவுள் நம்பிக்கை எனும் பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிய நீங்கள் அடுத்தவரைப் பார்த்து “நீங்க ஏன் இந்த பிளாட்பாரம்ல நிக்கறீங்க..”, “உங்க டிரெய்னு மூணாவது பிளாட்பாரம்தானே, நீங்க அஞ்சாவது பிளாட்பாரம் நிக்கலாமா”ன்னு வேற பிளாட்பாரம்ல நிக்கறதையே ஏதோ பெரும் பாதகச் செயல் மாதிரி பேசிட்டிருக்கீங்க..
அடுத்தவனின் வேதாந்தத்தை ஏறெடுத்துப் பார்த்தாலே தன் கடவுள் கண்ணைக் குத்திவிடுவார் என்ற பௌரானீகக் கதைகளில் வீணாப் போனதெல்லாம் இப்பதான், ரொம்ப சமீபகால வயிற்றுப் போக்குங்க.. இப்படியான லட்சுமணக் கோடுகளை வரைந்து கொண்டு அவற்றைத் தாண்டிப் போனாலே நம்ம நம்பிக்கை நாசமாப் பூடும்னு இறை நம்பிக்கையில் பலவீனமா இருக்கறது இந்த காலம்..
அந்த காலம் எப்படி இருந்து தெரியுமா..?
வை.மு. கோதைநாயகி அம்மாள் “நவநீதிகிருஷ்ணன்” னு ஒரு நாவல் எழுதுறாங்க.. எழுதுன அம்மாளு நம்மாளுன்னு பாக்கலீங்க PSME முஹம்மது யாகூப் சாஹிப்.. சூப்பரா ஒரு பாயிரம் எழுதிப் பாராட்டிப் போட்டாரு.. இந்த விஷயத்தை நம்ம கோதை Naan Rajamagal க்கு தெரிவிச்சுக்கிறேன்..
இது அப்படி போச்சுதா.. இன்னொரு மகான்.. நெல்லிக்குப்பம் மௌலவி முஹம்மது அப்துர் ரஹ்மான் சாயபு.. இவர் சிதம்பரம் தீட்சிதர் குடும்பத்தை சார்ந்த பெரும் பண்டிதர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அதன் தத்துவத்தில் மூழ்கி தன்னையே முத்தாக எடுத்தவர்.. (நேற்றைய பதிவில் கஸ்ஸாலி நூல்களை மொழி பெயர்த்தவர் என்று சொன்னேன் பாருங்க.. அவரேதான்..) இந்த மேதை “முஸ்லிம் அத்வைத மூலமொழி” (துஹ்பதுல் முர்ஸலாவின் மொழிபெயர்ப்பு) நூலை 1924ல் வெளிக் கொணர்கிறார்.. இதில் இந்துமத வேதாந்த பகுதியும் இணைக்கப் பட்டுள்ளது.. அதாவது ஒரு comparative religious studies மாதிரி..
இதுக்கு பாயிரம் பாடியவர் யார் தெரியுமா? சென்னை கா.சி. சிவசங்கர முதலியார் அவர்கள். இப்பயும் இருக்கோமே.. இது அவிங்க புத்தகம்.. அவிங்க ஒரு புத்தகத்தை வச்சே எல்லாரையும் ஒண்ணா சேர்த்துடுவாங்க.. அதை பார்த்தாலே கரண்டு மாதிரி பக்குன்னு புடிச்சுக்கும்..னு ஏகப்பட்ட கற்பனை பயங்கள்.. அதேமாதிரி இந்த பக்கம் இவிங்க.. வெளங்கிடாது..?
மௌலவி, கோதைநாயகி மாதிரி ஊர்தோறும் ஊடுருவிய வேர்களைத் தேடியே களைத்துப் போனாலும் சளைத்துப் போகாமல் இருக்கும் Kombai S Anwar, Lafees Shaheed, நிஷா மன்சூர், Maanaseegan ஆகியோருக்கு இந்த தகவலைத் தெரிவிச்சுட்டேன்..